புரதம் என்றாலே எல்லோருக்கும் முதலில் நினனைவுக்கு வருவது சிக்கன் தான். புரதங்கள் தான் நமது உடலின் பெரும்பாலான செயல்பாட்டுக்கும் தசையின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. சிக்கனில் உள்ள புரதம் சைவ உணவிலும் வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த பதிவு. சிக்கனை விட அதிக புரதம் உள்ள சைவ உணவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
சோயா பீன்ஸ்
சோயா பீன்ஸில் உடலுக்குத் தேவையான புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் உள்ளது. 100 கிராம் சோயா பீன்ஸில் 20 முதல் 25 கிராம் புரதம் இருக்கிறது. சோயா பீன்ஸை சாப்பிடுவதால் அதிலுள்ள புரதங்கள் உங்களுக்கு முழுமையாக் கிடைக்கும்.
Also Read : முட்டையின் வெள்ளைக்கரு, மஞ்சள் கரு, எது உடலுக்கு நல்லது?
கடலை பருப்பு
பருப்புகளிலேயே புரதங்கள் அதிகமாக உள்ள பருப்பு வகை என்றால் அது கடலைப்பருப்பு தான். 100 கிராம் கடலைப்பருப்பில் கிட்டதட்ட 38 கிராம் அளவுக்கு புரதங்கள் இருக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்துக்களும் உள்ளது. இந்த கடலைப்பருப்பை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதசத்து உங்களுக்கு கிடைக்கும். இது செரிமானத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.
பூசணி விதை
பூசணி விதை பார்ப்பதற்கு மிக சிறிய அளவில் இருந்தாலும் அதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. 100 கிராம் பூசணி விதையில் 37 கிராம் அளவு புரதம் உள்ளது. பூசணிக்காய் விதைகளில் மெக்னீசியம் நிறைந்திருப்பதால் இவை எலும்புகளுக்கு மிகவும் நல்லது.