Search
Search

அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

noodles in tamil

நூடுல்ஸ் என்பது குழந்தைகள் அதிகமாக விரும்பி உண்ணும் உணவாகும். கவர்ச்சியான விளம்பரங்களில் வரும் நூடுல்ஸில் ஆபத்துகளும் உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிலவகை நூடுல்ஸ்களில் மெழுகு அல்லது லிக்விட் பாரஃபின் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்கு சேர்க்கப்படுகிறது. இப்படி சேர்ப்பது உடல்நலத்துக்கு பெரும் தீங்கு இழைக்கக் கூடியது.

health tips in tamil

நூடுல்ஸ் என்பது பதப்படுத்தப்பட்ட ஒரு உணவாகும். இதில் நார்ச்சத்துக்களும் புரோட்டீன்களும் குறைவாக இருப்பதால் இது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

இதனை அடிக்கடி சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம், தலைவலி மற்றும் குமட்டல் போன்றவற்றை உருவாக்கும். மேலும் இதய நோய்க்கு வழிவகுக்கும்.

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் இந்த மாதிரியான உணவுப் பொருட்களை வாங்கி கொடுத்தால் அவர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி விடும்.

நூடுல்சை அடிக்கடி சாப்பிட்டால் அது மலச்சிக்கலை ஏற்படுத்தும். மேலும் மலக்குடல் புற்று நோய் வர வழிவகுக்கும்.

நூடுல்ஸில் உள்ள மைதா ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்து நீரிழிவு நோய் வர காரணமாக அமைகிறது.

இயற்கை முறையில் செய்யப்பட்ட வரகு அரிசி, சாமை அரிசி, தினை அரிசி, கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி அரிசி நூடுல்ஸ்களை சாப்பிடலாம். இவற்றில் உடலுக்குத் தேவையான சத்துக்களான கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி-6, நியாசின், மக்னீசியம் போன்றவை உள்ளன.

Leave a Reply

You May Also Like