ஒரு கிலோ வாழைப்பழம் 3,300 ரூபாய்…வடகொரியாவில் உணவுப் பஞ்சம்..!

வடகொரியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால் 2025 ஆம் ஆண்டு வரை மக்கள் கொஞ்சமாக உணவு சாப்பிட வேண்டும் என வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வடகொரியாவில் உணவுப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

விவசாயம் இல்லாமல் போனதால் உணவுப்பொருட்கள் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வடகொரியாவில் உணவுப் பஞ்சம் அதிகரித்துள்ளது.

Advertisement

தற்போது வடகொரியாவில் ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை சுமார் 45 டாலர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 3, 300 ஆகும்.

உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தை கடைபிடிக்கவேண்டும் என அதிபர் கிம் ஜோங் உன் அதிர்ச்சி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இப்போதே உணவு கையிருப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் 2025 வரை அரசு மக்களை குறைவாக உணவு உண்ணச் சொல்கிறது. இது எப்படி சாத்தியமாகும்? என மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்னர்.

அதிபரின் இந்த அறிவிப்பால் உலக நாடுகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. மேலும் பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.