கொரோனா விதி முறைகளை மீறியதால் பிரதமருக்கே 1.70 லட்சம் ரூபாய் அபராதம்..!

கொரோனா விதி முறைகளை மீறியதால் பிரதமருக்கே 1.70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர் நார்வே நாட்டு போலீசார். சட்டம் அனைவருக்கும் ஒன்று என்பதை நார்வே நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் நோயின் தாக்கம் குறையவில்லை. இதனால் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக நார்வே நாட்டின் பிரதமர் எர்னா சோல்பெர்க்கிற்கு இந்திய மதிப்பு படி 1.70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த தகவலை அந்நாட்டு காவல்துறை தலைவர் ஓலே சாவெருட் செய்தியாளர் சந்திப்பில் உறுதி செய்துள்ளார்.

அரசின் கட்டுப்பாட்டை பிரதமரே மீறிவிட்டார் என சர்ச்சை கிளம்பியதும், தாமாகவே முன்வந்து மன்னிப்பும் கேட்டார். ஆனால் காவல் துறையினர் அவரை விடவில்லை.

சட்டத்தின் முன் அனைவரும் சமமாக இருப்பதில்லை. இந்த அபராதம் விதிக்கப்பட்டது சரிதான்” என்று நார்வேயின் தலைமை காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.