O 2 விமர்சனம்
நயன்தாரா, பேபி ரித்விக் ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வெங்கட் பிரபுவிட,ம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கி உள்ளார்.
நயன்தாராவின் குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுவிடுவதில் சிரமம் பட்டு வருகிறார். மேல் சிகிச்சைக்காக கோவையில் இருந்து கொச்சிக்கு பேருந்து மூலம் செல்கிறார். பேருந்து செல்லும் வழியில் ஏற்படும் நிலச்சரிவால் பேருந்து சிக்கிக் கொள்கிறது.

இதில் நயன்தாரா, தனது குழந்தை, பேருந்து ஓட்டுனர் உட்பட 9 பேர் சிக்கிக் கொள்கிறார்கள். இறுதியில் பேருந்தில் சிக்கி கொண்ட அவர்கள் தப்பித்தார்களா? நயன்தாராவின் குழந்தைக்கு சிகிச்சை நடைபெற்றதா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி கதை.
நயன்தாராவின் மகனாக யூடியூப் புகழ் ரித்விக் நடித்துள்ளார். முதல் படம் என்று சொல்ல முடியாத படி நடித்திருக்கிறார். நயன்தாரா கதாபாத்திரத்தை உணர்ந்து அளவான நடிப்பை கொடுத்துள்ளார்.
இப்படத்தின் முழு கதையும் ஒரே ஒரு பேருந்தில் பயணிக்கிறது அந்த பேருந்தை பல கோணங்களில் எடுத்த ஒளிப்பதிவாளரை நிச்சயம் பாராட்டலாம்.
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும், தமிழ் ஏ.அழகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்.
