‘ஓ மை டாக்’ திரை விமர்சனம்

அருண் விஜய், அர்னவ் விஜய், விஜயகுமார், மஹிமா நம்பியார் மற்றும் வினய் ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்திருக்கிறார். அமேசான் பிரைம் வீடியோவில் இப்படம் வெளியாகியுள்ளது.

Oh My Dog tamil movie review

நன்கு பயிற்சி பெற்ற நாய்களை வைத்து சர்வதேச நாய் கண்காட்சிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார் வினய். அவர் வளர்க்கும் நாய்களில் கண் தெரியாத நாய் ஒன்று பிறக்கிறது. அந்த நாய் குட்டியை கொலை செய்யுமாறு வினய் கூறுகிறார்.

பிறகு அந்த குட்டி நாய் தப்பித்து அருண் விஜய்யிடம் சேர்கிறது. நாய்க்குட்டிக்கு கண்பார்வையை வரவழைத்து நாய் கண்காட்சிகளில் வெற்றிபெற வைக்க முயற்சி செய்கிறார். அவருடைய முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதே படத்தின் கதை.

Advertisement

அறிமுக இயக்குனர் சரோவ் சண்முகம், குழந்தைகளுக்கு ஏற்ற திரைப்படத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படத்தை எடுத்துள்ளார். அர்னவ் விஜய்யின் நடிப்பு பாராட்டுக்குரியது.

அருண் விஜய், விஜயகுமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மஹிமா நம்பியார் அளவான நடிப்பை கொடுத்துள்ளார். வில்லனாக வரும் வினயின் நடிப்பு செயற்கையாக உள்ளது.

கோபிநாத்தின் ஒளிப்பதிவு இயற்கை அழகையும் கதையின் தன்மையையும் சரியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை படத்திற்கு பொருந்துகிறது.

மொத்தத்தில் ‘ஓ மை டாக்’ குழந்தைகள் விரும்பி பார்க்கலாம்.