அவர்மைன் (Ourmine) என்ற ஹேக்கர்ஸ் நிறுவனம், ஒலிம்பிக் (Olympics) மற்றும் எஃப் சி பார்சிலேனா (FC Barcelona) நிறுவனங்களின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தை ஹேக் செய்து அதில் “அனைத்தையும் ஹேக் செய்து விட்டோம், உங்களது கணக்கின் பாதுகாப்பு சரியாக இல்லை. மேலும பாதுகாக்க எங்களை அணுகுங்கள்” என குறிப்பிட்டு அவர்களது அதிகாரபூர்வ இணையத்தளத்தின் பெயரை குறிப்பிட்டு இருந்தனர்.


இதனை அறிந்த டுவிட்டர், அதிரடியில் இறங்கி, அந்த கணக்கினை உடனடியாக முடக்கி, அவர்களிடம் கணக்கினை மீட்டு பாதுகாத்துக் கொண்டது.
இந்த தகவலை டுவிட்டர் அதிகாரபூர்வமாக அறிவித்தள்ளது. மேலும், இது குறித்து சைபர் பாதுகாப்பு குழு விசாரித்து வருகிறது.
அவர்மைன் என்ற நிறுவனம் 2016-ல் இருந்து இயங்கி வருகிறது, மேலும் இந்நிறுவனத்தில் சவூதி அரேபியாவை சார்ந்த இளைஞகர்கள் பணியாற்றி வருவாதாகவும் நம்பப்படுகிறது.
இந்நிறுவனம் Facebook CEO Mark Zuckerberg, Twitter CEO Jack Dorsey and Google CEO Sundar Pichai போன்ற பல பிரபலங்களின் கணக்குகளை முடக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.