தென் ஆப்பிரிக்காவில் உருவாகி உலகளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஒமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் 66 மற்றும் 46 வயதினை சேர்ந்த 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.