Search
Search

மக்களை அச்சுறுத்தும் மிக மோசமான ‘ஒமைக்ரான் கொரோனா வைரஸ்’

புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. இந்த வைரஸ் அதிக வீரியமுள்ள வைரஸ் என கூறப்படுகிறது.

இந்த வைரஸ் பாதிப்பில் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருப்பதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயண கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவான கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் புதிதாக அதிக வீரியமுள்ள கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது. இதற்கு ‘ஒமைக்ரான்’ என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் முந்தைய வைரஸ்களை விட மிக வேகமாக பரவக்கூடியது என செய்திகள் வெளியாகியுள்ளன. தென் ஆப்ரிக்காவில் 24 சதவீத மக்கள் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். இங்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதனால், புதிய வகை வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.’

புதிய வைரசின் தன்மை குறித்து தெரியாமல் பீதியடையத் தேவையில்லை. இருப்பினும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You May Also Like