ஜூலை 1-ந் தேதி முதல் தமிழகத்தில் ஆம்னி பஸ் சேவை தொடக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் கொண்டு வரப்பட்டு வருகிறது. இன்று முதல் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அரசு பஸ் சேவை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஜூலை 1&ந் தேதி முதல் ஆம்னி பஸ் சேவை தொடங்கப்படும் என்று தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

today tamil news

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தமிழகத்தில் 4 ஆயிரம் ஆம்னி பஸ் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் இன்று ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன.

Advertisement

ஊரடங்கு காரணமாக ஆம்னி பஸ் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை நம்பியுள்ள தொழிலாளர் குடும்பம் வருவாய் இழந்துள்ளனர். ஜூலை 1-ந் தேதி முதல் அனைத்து பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ்கள் 1-ந் தேதி முதல் இயங்கும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.