இனி என் வாழ்க்கையில ஐபோன் வாங்கமாட்டேன்.. இளைஞர் குமுறல்

தாய்லாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐபோன் வாங்க வேண்டும் என்று பல நாட்களாக ஆசைப்பட்டிருந்தார், அந்த நேரத்தில் சமூக வலைத்தளத்தில் ஐபோன் மலிவான விலைக்கு கிடைக்கும் என்று வந்த விளம்பரத்தை பார்த்த அந்த நபர், அதனை ஆடர் செய்துள்ளார்.

ஆடர் செய்து இரண்டு நாட்கள் கழித்து அவரது வீட்டிற்கு அவர் உயர அளவிற்கு பார்சல் வந்துள்ளது. அதனை வாங்கிய அவர் உள்ளே திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அந்த பார்சலில் உள்ளே டேபிள் இருந்துள்ளது. அது ஐபோன் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐபோன் வாங்க வேண்டும் என்று ஆசையில் இருந்த இளைஞருக்கு ஐபோன் வடிவத்தில் இருந்த டேபிளை பார்த்து வெறுப்பாகி விட்டார்..

இந்த இளைஞர் ஐபோன் ஆடர் செய்யும் போது தயாரிப்பு விவரங்களை பார்க்காமலே ஆடர் செய்து விட்டார். ஆனால் தற்போது தனது தவறை எண்ணி வருத்தப்பட்டு, தனது சமூகவலைத்தளத்தில் அந்த டேபிளின் புகைப்படத்தை பதிவிட்டு விளக்கியுள்ளார்.

மேலும் ஐபோன் மலிவான விலை என்று நான் ஏமர்ந்துவிட்டேன், இது போல் யாரும் செய்யாதீர்கள் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.