ஆன்லைனில் கேட்டது ‘ஆப்பிள்’ வந்தது ‘ஆப்பிள் ஐ-போன்’

சில நேரங்களில் சிலரது வாழ்வில் திடீரென அதிர்ஷ்டம் அடிக்கும். அதேபோல UKவை சேர்ந்த நபரொருவர் இணையதளத்தில் ஆப்பிள் பழத்தை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு வந்ததோ ஆப்பிள் ஐபோன் இதனை பார்த்து ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்துள்ளார்.

UKவை சேர்ந்த 50 வயதான நிக் ஜேம்ஸ் தனது வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் TESCO என்ற நிறுவனத்தின் இணையதளத்தில் ஆர்டர் செய்துள்ளார். அதில் அவர் ஆப்பிளும் ஆர்டர் செய்துள்ளார்.

ஆனால் அவருக்கு ஆப்பிளுக்கு பதிலாக ஆப்பிள் போனை அந்நிறுவனம் அனுப்பியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியான ஜேம்ஸ் உடனடியாக தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தினை சரி பார்த்துள்ளார். ஆனால் தனது வங்கி கணக்கில் பணம் எதுவும் பிடிக்கப்படவில்லை.

இது தவறுதலாக அனுப்பப்பட்டது அல்ல. TESCO நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களே மகிழ்விக்க இதேபோல் சில எதிர்பாராத பரிசுகளை வாடிக்கையாளர்களுக்கு அள்ளிக் கொடுக்கும். அப்படிப்பட்ட கவர்ச்சியான பரிசுதான் இந்த ஆப்பிள் ஐபோன்.

இந்த சம்பவத்தினை ஜேம்ஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அந்த நிறுவனத்திற்கு நன்றியினை தெரிவித்துள்ளார்.

Man Ordered Apple From Online Store But Came Iphone Instead