‘ஒத்த செருப்பு’ இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்

நடிகர் பார்த்திபன் தயாரித்து இயக்கிய ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாவிலும் சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு ஆகிய விருதுகளையும் வென்றது.

tamil cinema news

இந்த படத்தை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்ய முடிவு செய்து இருப்பதாக பார்த்திபன் ஏற்கனவே கூறியிருந்தார். இதில் நடிக்க அபிஷேக் பச்சனிடம் பேசி வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிக்க அபிஷேக் பச்சன் இந்த படத்தில் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி உள்ள நிலையில் இப்படத்தில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார்.

Advertisement

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.