ஒற்றை தலைவலி நீங்க பாட்டி வைத்தியம்

இயந்திர வாழ்க்கையில் ஒற்றை தலைவலி பெரும் பிரச்சினையாக உள்ளது. இது வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் வரும்.

கம்ப்யூட்டர், மொபைல் போன் அதிக நேரம் பார்ப்பது, தூக்கமின்மை, காலநேரம் தவறி உணவு அருந்துதல், அஜீரண கோளாறு, தேவையற்ற சிந்தனை, மன உளைச்சல் போன்ற காரணங்களால் இந்த ஒற்றை தலைவலி வருகிறது.

இன்னும் சிலருக்கு உடலில் போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருப்பது கூட ஒற்றைத் தலைவலி வரக் காரணமாக அமைகிறது.

Advertisement
migraine in tamil

இதனை எளியமுறையில் நீக்க வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தலாம்.

நொச்சி இலையைக் கசக்கி சாறு எடுத்து இரண்டு பக்க நெற்றிப் பொட்டுகளிலும் நன்கு பூசினால் தலைவலி குறையும்.

3 தேக்கரண்டி தண்ணீரில் அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை கலந்து மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.

நல்லெண்ணெய் 100 மிலியுடன் 5 மிலி குப்பைமேனி சாறு கலந்து காய்ச்சி வடிகட்டி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.

பூண்டையும், மிளகையும் தட்டிப்போட்டு நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி ஆறின பிறகு தலையில் தேய்த்து குளித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

மருதோன்றி இலையை மை போல அரைத்து, இரு பக்க நெற்றிப் பொட்டுகளிலும் கனமாகப் பற்று போட்டால் உடனே ஒற்றை தலைவலி குணமாகும்.

ஒற்றைத் தலைவலி ஏற்படும் போது மசாஜ் செய்வது நல்ல பலனைத் தரும். உங்கள் கழுத்து, தோள்பட்டை மற்றும் நெற்றி போன்ற பகுதிகளில் மசாஜ் செய்து விடுங்கள். இது உங்கள் டென்ஷன் மற்றும் பதட்டத்தை குறைத்து ஒற்றைத் தலைவலியையும் குறைக்கும்.