3 நாட்களுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி கிடையாது: ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் தயாரிப்புக் கூடத்தில் உள்ள கூலர் எந்திரம் பழுதடைந்ததால், நள்ளிரவு முதல் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் அங்குள்ள பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா குழுமம் மனு தாக்கல் செய்தது. அதன் பிறகு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது.

முதல்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் நேற்று காலை லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. உற்பத்தி அளவை அதிகரிக்க 35 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

இந்த நிலையில் திடீரென கூலர் எந்திரம் பழுதடைந்தது. அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் அடுத்த 3 நாட்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படும் என ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.