Search
Search

அப்போ பார்ட் 2 உறுதியா? – பையா 2 சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குநர் லிங்குசாமி

வெகு சில படங்கள் மட்டுமே எடுத்துவந்தாலும், அதிலும் நல்ல பல திரைப்படங்களைக் கொடுத்து தங்களுக்கென்று ஒரு பெயரை பெற்றுள்ள இயக்குனர்களின் பட்டியலில் லிங்குசாமி அவர்களுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.

கும்பகோணத்தை அடுத்த குடவாசலில் பிறந்த இவர், சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு மம்மூட்டி அவர்களை கொண்டு தமிழில் இயக்கி வெளியிட்ட திரைப்படம் தான் ஆனந்தம். அந்த ஆண்டுக்கான தமிழகத்தின் மாநில அளவிலான விருதை இந்த படம் தட்டிச் சென்றது.

இதை தொடர்ந்து மாதவனின் ரன், அஜித் அவர்களின் நடிப்பில் ஜி, விஷாலின் சண்டக்கோழி, விக்ரமின் பீமா என்று பல வெற்றி படங்களை கொடுத்தவர் லிங்குசாமி. இவருக்கு மிகப்பெரிய அளவில் புகழை பெற்று தந்த இன்னொரு படம் என்னவென்று கேட்டால் நிச்சயமா அதற்கு அனைவரும் பையா என்று தான் கூறுவார்கள்.

கார்த்திக் அவர்களுடைய இயல்பான நடிப்பும் கதையின் களமும் பலரையும் ஈர்த்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய இயக்குநர் லிங்குசாமி பையா படத்தின் இரண்டாம் பாகம் வரும் மே மாதம் துவங்கும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு பதிலாக ஆர்யா நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

You May Also Like