கொரோனா.. இந்நோய் பரவல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு போட்டு, அந்நோயை கட்டுப்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தனக்கு கொரோனா வராமல் இருக்க வேண்டும் என்று, பாகிஸ்தான் பிரதமர் பிரதமர் இம்ரான் வெள்ளிக்கிழமை அன்று, சீனாவின் சைனோஃபார்ம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

தடுப்பூசி போட்டு இரண்டு நாட்கள் கழித்து பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பிரதமர் இம்ராம் கான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக சிறப்பு உதவியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி போட்டும் பிரதமருக்கு கொரோனா வந்ததால் அந்நாட்டு மக்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்..