மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

இந்த ஆண்டு கொரோனா காரணமாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. மாடு பிடி வீரர்களும், காளைகளும் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க வேண்டும் ஒவ்வொரு போட்டியிலும் 150 பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

madurai news tamil

பார்வையாளர்கள், மாடு பிடிவீரர்கள் மற்றும் மாட்டு உரிமையாளர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போட்டு இருக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. தற்போது மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தங்க காசுகள், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.