16 கோடி ரூபாய் மோசடி செய்த ஹரி நாடார் கைது

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஹரி நாடார் பணமோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் 37627 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இந்நிலையில் கர்நாடக தொழிலதிபர் ஒருவருக்கு கடன் உதவி வாங்கி தருவதாக கூறி 16 கோடி மோசடி செய்ததாக ஹரி நாடார் மீது புகார் எழுந்தது. புகாரை அடுத்து பெங்களூர் குற்றப்பிரிவு போலீசார் கேரளாவில் அவரை கைது செய்தனர். விசாரணைக்காக அவரை பெங்களூருக்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடமாடும் நகைக்கடை என தமிழகத்தில் பலராலும் அறியப்படுபவர் ஹரி நாடார். சினிமாத்துறையில் தயாரிப்பாளராகவும் ஹீரோவாகவும் களமிறங்கியுள்ள ஹரி நாடார் 2கே அழகான காதல் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.

Advertisement