உருவாகும் ஒரு ஆக்ஷன் திரில்லர்.. மீண்டும் இணையும் சூப்பர் Combo!

தனது முதல் படத்திற்காகவே தேசிய விருது பெற்ற வெகு சில இயக்குநர்களில் ஒருவர் தான் பாண்டிராஜ். 2009ம் ஆண்டு வெளியான “பசங்க” என்ற திரைப்படத்தின் மூலம் எழுத்தாளராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் களமிறங்கியவர்.
ஆரம்ப காலகட்டத்தில் புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தவர், இயக்குனர் பாக்யராஜ் அவர்களுடைய அலுவலகத்தில் பணியாளராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு பிரபல இயக்குனர் சேரன் அவர்களுடைய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.
அதன் பிறகு தங்கர் பச்சான் மற்றும் சிம்பு தேவன் ஆகிய இயக்குநர்களிடமும் இவர் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பிறகு இவர் களமிறங்கிய முதல் திரைப்படம் தான் பசங்க, அதன் பிறகு வம்சம், மெரீனா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இது நம்ம ஆளு போன்ற பல படங்களை வெற்றி படங்களாக கொடுத்து வந்தார்.
2016ம் ஆண்டு முதல் முறையாக நடிகர் விஷால் அவர்களுடன் இணைந்து இவர் இயக்கிய, தயாரித்து வெளியிட்ட திரைப்படம் தான் கதகளி. அந்த படம் நல்ல முறையில் ஓடிய நிலையில் விஷாலின் ரசிகர்கள் மீண்டும் அவர் எப்போது பாண்டிராஜுடன் இணைவார் என்று காத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் பாண்டிராஜ், விஷாலுடன் இணையவிருக்கிறார், அந்த படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து முடிந்துள்ளது என்றும், ஒரு ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாக உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.