பாரிஸ் ஜெயராஜ் திரை விமர்சனம்

நடிகர்கள்: சந்தானம், அனைகா சோடி, சஷ்டிகா, பிருத்விராஜ், மொட்டை ராஜேந்திரன், டைகர் தங்கதுரை

இயக்கம்: ஜான்சன். கே

இசை: சந்தோஷ் நாராயணன்

Advertisement

ஒளிப்பதிவு: ஆர்தர் கே வில்சன்

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்த A1 திரைப்படம் 2019ல் வெளிவந்தது. தற்போது அதே குழு மீண்டும் இப்போது ஒன்றாக களமிறங்கியிருக்கும் படம்தான் பாரிஸ் ஜெயராஜ்.

பாரிஸ் பகுதியில் கானா பாடகராக இருக்கும் சந்தானத்திற்கு அவருடைய முதல் காதல் தோல்வி அடைந்து விடுகிறது. அந்த நேரத்தில் கதாநாயகி அறிமுகமாகிறார். அதன்பிறகு அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

முதலில் இந்த காதலுக்கு ஆதரவு தெரிவித்த சந்தானத்தின் தந்தை பிறகு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். கதாநாயகியின் தந்தையும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

சந்தானத்தின் முதல் காதலை ஆதரித்து தந்தை திடீரென எதிர்க்க காரணம் என்ன? இவர்களுடைய எதிர்ப்பை மீறி இந்த ஜோடி இணைந்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் முற்பாதியில் காமெடி பெரிய அளவில் இல்லை. இரண்டாம் பாதியில் வரும் காமெடி காட்சிகள் தான் படத்திற்கு பக்கபலம். மொட்டை ராஜேந்திரன், டைகர் தங்கதுரை வரும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன.

ஹீரோ, ஹீரோயின் வரும் காதல் கதை பழசு தான் என்றாலும் சந்தானம், ப்ருத்வி ராஜ் மற்றும் சில கதாபாத்திரங்களால் பார்க்கும்படியாக இருக்கிறது. படத்தின் முதல் பாதியில் கவனம் செலுத்தாமல் போனது படத்தின் பெரிய மைனஸ்.

மொத்தத்தில் பாரிஸ் ஜெயராஜ் கொஞ்சம் கஷ்டப்பட்டு சிரிக்க வைக்கிறார்.