நான் கொரோனாவால் இறந்துவிட்டால் எனது சொத்தை இவர்களுக்கு கொடுங்கள் : ட்ரீம்ஸ் நாயகி

2004 ம் ஆண்டு வெளிவந்த தனுஷின் ட்ரீம்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகை பாருல் யாதவ் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மீண்டு வந்திருக்கிறார். கொரோனா இருந்த போது தான் பட்ட கஷ்டங்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாருல் யாதவ் கூறியதாவது “தற்போது நான் நலமாக இருக்கிறேன். கொரோனா இரண்டாம் அலையில் எனக்கு நெருக்கமானவர்கள் இறக்கத் துவங்கியதும் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. மேலும் எனக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது” என்றார்.

tamil cinema news

“என் வீட்டில் வேலை செய்யும் பெண் மற்றும் என் குடும்பத்தார் என மொத்தம் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டோம். தொடர்ந்து 12 நாட்களுக்கு 103 டிகிரி காய்ச்சல் இருந்தது. இதனால் நான் இறந்துவிட்டால் என் சொத்துக்களை என் இரண்டு சகோதரிகளுக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று இமெயில் எழுதினேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement