பவளவண்ணபெருமாள் திருக்கோயில் வரலாறு

ஊர் -திருப்பவளவண்ணம்

மாவட்டம்– காஞ்சிபுரம்

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர் -பவளவண்ணர் தாயார்

தீர்த்தம்– சக்கர தீர்த்தம்

திருவிழா– வைகாசியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், பங்குனியில் ஐந்து நாட்கள் பிரமோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி.

திறக்கும் நேரம் -காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 7;30 மணி வரை.

தல வரலாறு

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 56 வது திவ்ய தேசம். விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் இடையே யார் உயர்ந்தவர் என வாக்குவாதம் வந்தது. அதற்கு சிவன் தன் திருவடியையும், திருமுடியையும் யார் முதலில் காண்கிறாரோ அவரே பெரியவர் எனக் கூறினார்.

விஷ்ணு திருவடியையும், பிரம்மா திருமுடியையும் காண சென்றனர். அப்போது விஷ்ணுவோ திருவடியை காண முடியவில்லை என ஒப்புக் கொண்டார். பிரம்மனோ திருமுடியைக் கண்டதாகப் பொய் உரைத்து சிவ சாபம் பெற்றார். எனவே பிரம்மனுக்கு பூலோகத்தில் தனி கோயில்களும் வழிபாடுகளும் இல்லை. ஆகவே சாபம் நீங்க சிவனை நோக்கி யாகம் ஒன்று செய்ய தொடங்கினார்.

பிரம்மன் தன் மனைவியான சரஸ்வதி தேவியை அழைக்காமல் யாகத்தை தொடங்கினர். அவ்வாறு செய்யவே தேவி சினம் கொண்டு சில அசுரர்களை அனுப்பி இடையூறு செய்தால். இதனால் கலக்கம் அடைந்த பிரம்மன் விஷ்ணுவிடம் சரஸ்வதியை சமாதானம் செய்யும்படி வேண்டினார்.

விஷ்ணுவும் அவ்வாறே செய்து அசுரர்களை அழித்து, சிதறிய ரத்தத்துடன் பவள நிற மேனியாராக காட்சி கொடுத்தார். பெருமாள் சிவந்த நிறத்துடன் ஆதிசேஷன் மீது அமர்ந்த மேற்கு நோக்கி வீற்பு கோலத்தில் இருக்கிறார். மகாவிஷ்ணு கிருதயுகத்தில் பால் நிறமாகவும், திரேதாயுகத்தில் பவள நிறமாகவும், துவாபாரயுகத்தில் பசுமை நிறமாகவும், கலியுகத்தில் நீல நிறமாகவும் காட்சி தந்தாராம்.

அவ்வகையில் பார்த்தால் இவர் திரேதாயுகத்தில் அருள் செய்பவராக இருக்கிறார். பிருகு மகரிஷி விஷ்ணுவை மார்பில் உதைத்து மனம் வருந்தி பல தலங்களுக்கு சென்று பாவவிமோசனம் தேடினார். அப்போது நாரதரின் ஆலோசனைப்படி இத்தலத்தில் உள்ள சக்கர தீர்த்தத்தில் நீராடி பெருமாளை எண்ணி தவம் புரிந்தார். அவ்வேளையில் மகரிஷிக்கு விரைவில் காட்சி கொடுத்து விமோசனம் அளித்தார்.

எனவே இங்கு கருவறையில் விஷ்ணுவை வணங்கிய கோலத்தில் இருக்கிறார் பிருகு மகரிஷி. இத்தலம் ஐந்து நிலை ராஜகோபுரம் உடையது. தாயார் சன்னதி மண்டபம் மேற்கூரையில் எட்டு திசை அதிபர்களின் சிற்பங்கள் உள்ளது. இவர்களை வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை.

Recent Post

RELATED POST