புற்றுநோய் வராமல் தடுக்கும் பயத்தங்காய்

பயத்தங்காய் அவரை குடும்பத்தை சேர்ந்த காய்கறியாகும். பயத்தங்காய் பச்சை நிறத்தில் பீன்ஸை போல் இருக்கும். ஆனால் இக்காய் பீன்சை விட நீளமானதாகவும், மெல்லியதாகவும் இருக்கும். இதனை காராமணி என்று கூறுவார்கள்.

பயத்தங்காய் மருத்துவ பயன்கள்

பயத்தங்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடெண்ட்ஸ் புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டவை. மேலும் பயத்தங்காயில் நாச்சத்து, இரும்புச்சத்து மற்றும் அத்தியாவசிய தாதுச்சத்துகள் கொண்டது.

பயத்தங்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால் நமக்கு நீரிழிவுநோய், சிறுநீரக பிரச்சனை, இதய பிரச்சனை போன்ற எந்தவொரு பிரச்சனையும் நம்மை தாக்காது.

இதயம், சீறுநீரகம் போன்றவை சீராக இயங்க தேவையான பொட்டாசியம், கால்சியம்,மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் இதில் அதிகமாக நிறைந்துள்ளது.

முடி வளர்ச்சிக்குத் தேவையான புரதச்சத்து பயத்தங்காயில் அதிகமாக உள்ளது. பயத்தங்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

பயத்தங்காயில் உள்ள லிக்னின் என்னும் சக்தி, பக்கவாதம், ஹைப்பர் டென்ஷன் போன்ற நோய்களில் இருந்து காக்கும் தன்மை கொண்டது.

வயிறு, கணையம் மற்றும் மண்ணீரல் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை பயத்தங்காய்க்கு உண்டு. மேலும் சீராண குடல் இயக்கத்திற்கும், சீறுநீர் பாதை அடைப்பை சரி செய்கிறது.

இதில் உள்ள நார்ச்சத்து உடல்பருமனை கட்டுப்படுத்துகிறது. இதயத்திற்கு வலுமையை தருகிறது. மேலும் நரம்பு மண்டல கோளாறுகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

பயத்தங்காயை பருப்பு சேர்த்து பொறியல் செய்து சாப்பிட்டால் தோல் சுருக்கம், முதுமை போன்ற பிரச்சனைகளில் இருந்து சிறிது வித்தியாசம் காணப்படும். மேலும் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

Recent Post