சம்பளம் மட்டும் அல்ல, போனசும் உண்டு – அசத்தும் Paytm நிறுவனம்

கொரோனாவால் பல நிறுவனங்களுக்கு பிரச்சனை ஏற்பட்ட போதிலும் சில நிறுவனங்கள் ஊழியர்களை பாதுகாக்க சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். டாடாவின் TCS நிறுவனத்தை தொடர்ந்து, இப்போது Paytm நிறுவனம் தங்களின் ஊழியர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளது.

Paytm நிறுவனத்தில் 5000-த்திற்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள் உள்ளனர், மேலும், 500 பணியாளர்களை புதிதாக எடுக்க போவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

paytm ceo
Paytm CEO Vijay Shankar Sharma

இதுமட்டும் அல்லாது, இந்நிறுவனத்தை பெரிய அளவிற்கு வளர உதவிய ஊழியர்களுக்கு சுமார் 250 கோடி மதிப்புடையை நிறுவனத்தின் பங்குகளை அவர்களுக்கு போனசாக வழங்க உள்ளது. இச்செய்தியை அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

Paytm நிறுவனத்தில் பணியாற்றும் எந்ந ஒரு நபரையும் நிறுத்த போவதில்லை, மேலும், அவர்களது சம்பளம் முழுமையாக வழங்கப்படும், கூடவே போனசும் வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி ரோஹித் தாகூர் அறிவித்துள்ளார்.