Search
Search

பெண்குயின் (2020) – திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியுள்ள படம் பெண்குயின். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ளது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ், மாஸ்டர் அத்வைத், மதி ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஈஸ்வர் கார்த்திக் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT தளத்தில் வெளியானதுபோல இந்த படமும் OTT தளத்தில் வெளியாகி உள்ளது.

கீர்த்தி சுரேஷ் தனது முதல் குழந்தை அஜய் (அத்வைத்) தொலைந்து போனதால் கணவருடன் மனக்கசப்பு ஏற்பட்டு இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு அவருடை குழந்தை அஜயை பார்க்கிறார். ஆனால் எதையும் பேசும் நிலையில் அந்த குழந்தை இல்லை.

இந்நிலையில் குழந்தையை கடத்தியவன் மீண்டும் வர கதை சூடு பிடிக்கிறது. யார் அந்த கடத்தல்க்காரன்? எதற்காக குழந்தையை கடத்தினான்? என்பது தான் சஸ்பென்ஸ் த்ரில்லரின் மீதிக்கதை.

கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணனின் இசையும் ஒரு நல்ல த்ரில்லருக்கான பின்னணியை சிறப்பாக உருவாக்குகின்றன.

கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் கர்ப்பிணியாகவும் ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் கீர்த்தி சுரேஷைத் தவிர, மற்ற எல்லோருமே சுமாராக நடிக்கிறார்கள்.

கௌதமாக வரும் மாதம்பட்டி ரங்கராஜ், எல்லாவற்றுக்கும் ஒரே முகபாவத்தோடு இருக்கிறார்.

இரண்டாவது பாதியில் பல இடங்களில் லாஜிக் மீறல்களை கவனிக்காமல் விடுவதால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் இல்லை.

Leave a Reply

You May Also Like