கொரோனா குறைந்து வரும் நிலையில் டெங்கு பரவுவதால் மக்கள் பீதி

தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில் சென்னையில் கடந்த 13 நாட்களில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

டெங்குவை பரப்பும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

மழைக்காலம் தொடங்கி விட்டதால் எல்லா மாவட்டங்களிலும் டெங்கு கொசுவை ஒழிக்கும் பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.