என்னடா இது கூகிளுக்கு வந்த சோதனை – என்னன்னு நீங்களே பாருங்க..!

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து ரூ.100-ஐ தாண்டி விற்று வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

பெரும்பாலான இல்லங்களில் தக்காளிதான் சமையலில் முக்கியதுவம் வகித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் பலரும் தக்காளி இல்லாமல் குழம்பு, சட்னி செய்வது எப்படி என்று கூகுளில் தேடி வருவதாக தெரிகிறது. மக்கள் அதிகம் தேடுவதைதான் அடுத்த ஆள் தேடும் பொழுது கூகிள் suggestion ஆக காட்டும். இதுகுறித்த போட்டோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மற்ற காய்கறிகளின் விலை சற்று குறைய தொடங்கினாலும், தக்காளியின் விலை மட்டும் உயர்ந்த வண்ணம் உள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

Advertisement