முழு ஊரடங்கு எதிரொலி – காலியாகும் சென்னை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினம் தினம் அதிகரித்து வருவதால், நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 12 மணி வரை மளிகை கடைகள், இறைச்சிக்கடைகள் முதலியவை தளர்வுகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது. முக்கியமாக தனியார், அரசு பேருந்துகள், வாடகை டாக்சி, ஆட்டோ மற்றும் டாஸ்மாக் போன்றவைகள் இயங்க நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது முடக்கம் நீட்டிக்கப்படலாம் என்ற பயத்தில் பெரும்பாலானோர் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு இருசக்கர வாகனங்களில் குடும்பத்துடன் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகள் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மூட்டை முடிச்சுகளுடன் பைக்கில் செல்லும் பலரையும் காணமுடிகிறது.

வெளிமாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் தமிழக அரசால் இயக்கப்படவுள்ளது. இதனால் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement