தீ பந்தத்துடன் கொரோனாவை ஓட ஓட விரட்டிய மக்கள். அடடா என்ன ஒரு புத்திசாலித்தனம்..

கொரோனாவின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் திவிரமாக பரவி வருகிறது. இதில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. முகக்கவசம் அணிவது கைகளை சுத்தமாக கழுவுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

கடந்த ஆண்டு பொது முடக்கத்தின் போது மக்கள் தீபங்களை ஏற்றவேண்டும். கை தட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதில் வட மாநில மக்கள் தட்டுகளை தட்டியவாறு கோ கொரோனா கோ என்று முழக்கங்களை எழுப்பினர். இது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம், அகர் மால்வா மாவட்டம் கணேஷ்புரா கிராம மக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தியவாறு இரவு நேரத்தில் ஓடினர். அப்போது, ‘ஓடு கரோனா ஓடு’ என்ற முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். பிறகு அந்த தீப்பந்தங்களை ஊருக்கு வெளியே வீசினார்கள். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படி செய்வதால் இது எங்களது ஊரைக் காக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.