பெரியார் சிலைக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை

தந்தை பெரியாரின் 48ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திராவிட தலைவர் வீரமணியும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கி வீரமணி தலைமையில் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். அவருடன் பொதுச்செயலாளர்கள் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Advertisement