சீரடி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க அனுமதி.

மராட்டிய மாநிலம் அகமது நகரிலுள்ள சீரடி சாய்பாபா கோவில் ககொரோனா காரணமாக முடங்கியது. பக்தர்களின் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஆன்லைன் பதிவு செய்யும் 15,000 பக்தர்களுக்கும் நேரடியாக வரும் 10,000 பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.

latest tamil news

இந்நிலையில் கோவில் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க அகமது நகர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போசலே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement

கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட ஊழியர்கள் மற்றும் 50% இருக்கை வசதியுடன் மட்டுமே அன்னதானம் நடைபெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.