சென்னையை நோக்கி வருகிறது “பெத்தாய்” புயல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு  “பெத்தாய் ” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரும்.

Advertisement

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் கரையை கடந்த போது 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது.  அதே போல் பெத்தாய் புயலும் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் 90 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சம் 100 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.