பீட்சா 3 The Mummy – படம் இப்படி தான் இருக்கும்.. இயக்குநர் தந்த விளக்கம்!

பிரபல தயாரிப்பாளர் சி.வி குமார் அவர்களின் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஓடிய திரைப்படம் தான் பீட்சா. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.
2012ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் ஒரு மிகச் சிறந்த திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் இது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பீட்சா 2 என்ற திரைப்படத்தை கடந்த 2013ம் ஆண்டு தயாரித்து வெளியிட்டார் சி.வி குமார். இந்த படத்தை எழுதி இயக்கியது தீபன் சக்கரவர்த்தி, மேலும் இந்த படத்தில் பிரபல நடிகர் அசோக் செல்வன் மற்றும் சஞ்சிதா செட்டி ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் சுமார் 10 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது. மீண்டும் சி.வி குமார் தயாரிப்பில் இந்த படம் வருகின்ற மே 12ம் தேதி உலக அளவில் வெளியாகிக்கின்றது. மோகன் கோவிந்த் இயக்கத்தில் இந்த படம் வெளியாகிறது.
பீட்சா 3 தி மம்மி என்ற இந்த படம், இயல்பான பேய் படங்களில் இருந்து எப்படி மாறுபடும் என்பதை இப்படத்தின் இயக்குநர் மோகன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். குறிப்பாக தி மம்மி என்ற தலைப்புக்கு ஏற்ப கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். வாழ்த்துக்கள் மோகன்!