ஒமிக்ரான் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் 85 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ஆந்திரா போன்ற 15 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 226 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடியுடன் ஒமிக்ரான் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். மருத்துவத் துறை நிபுணர்களுடன் ஒமிக்ரான் பாதிப்பு நிலவரம், கட்டுப்பாடுகள், மருந்து இருப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து அந்தந்த மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement