குடிபோதையில் அலப்பறை – பொக்லைன் இயந்திரத்தால் தூக்கி அடித்த டிரைவர்

தெலுங்கானா மாநிலம் முலுகு பகுதியில் பொக்லைன் டிரைவர் ஒருவர் தனது பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் ஒருவர் பணியை செய்ய விடாமல் அலப்பறை கொடுத்துள்ளார். இதனால் பொக்லைன் டிரைவருக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பொக்லைன் டிரைவர், பொக்லைன் இயந்திரத்தால் அந்த குடிகாரரை தள்ளிவிட்டார். இதனால் அந்த குடிகாரர் கீழே விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இது குறித்து காவல் துறையினர் பொக்லைன் டிரைவர் மீதும் குடிபோதையில் இருந்த நபர் மீதும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.