தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.

பொடுகுவர முக்கிய காரனம் ஹார்மோன் கோளாறுகள், கூந்தலில் சரியில்லாத பராமறிப்பு, தவறான உணவு பழக்கம், டென்ஷன், பரம்பரைத்தன்மை தான் இதற்கு காரணங்கள்.

பொடுகு வந்தவர்கள் வாரம் இரண்டு முறை தலைக்கு நல்ல ஷாம்பு அல்லது சியக்காய் போட்டு குளிக்கவும்.

கண்டகண்ட க்ரீம்களை தலைக்கு தேய்க்கக் கூடாது. பொடுகு வந்த பின்பு தலையில் மிகுந்த அரிப்புகள் இருக்கும். அதனை விரல் நகம் வைத்து அதிகமாக சுரண்டக் கூடாது.

Advertisement

சீப்பை 3 நாளுக்கு ஒரு முறை சூடு தண்ணீரில் போட்டு அலசிய பின்பு பயன்படுத்தவும். அதிகமாக தண்ணீர் குடிக்கவும். எண்ணெய் அதிகம் உள்ள உணவு பண்டங்களை தவிர்க்கவும்.

முக்கியமாக டென்ஷன் இல்லாமல் இருக்கனும். தலையணை உறைகள் மற்றும் தலையணையினை சுத்தமாக வைத்துக்கொள்ளவும். சீப்பு, தலை துடைக்கும் டவல், ஹேர் ஹிளிப் தலைக்கு பயன்படுத்தும் அனைத்துமே தனியாக பயன்படுத்தவும்.

பொடுகு வராமல் தடுக்க வேண்டும் என்றால், குளிக்கும் முன்பு நன்றாக தலையில் சிறிது வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயினை பஞ்சில் நனைத்து தலையின் வேரில் தேய்த்து நன்றாக ஊறிய பின்பு குளிக்க வேண்டும்.

வாரம் ஒரு முறை ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கவும். எலுமிச்சை சாறு, அல்லது முட்டையின் வெள்ளை கரு அல்லது வெள்ளை முள்ளங்கி சாறு தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.

4 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 4 ஸ்பூன் நல்ல தரமான சியக்காய் பவுடர், 2 கப் மருதாணி பவுடர்,1 எலுமிச்சை பழ தோல், 1 ஆரஞ்ப்பழத்தோல், 2 ஸ்பூன் வேப்பிலை பொடி அனைத்தையும் ஒன்றாக கலந்து 1கப் தயிருடன் கலந்து தலைக்கு வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்தால் பொடுகு போய் விடும்.

வேப்பிலை மிகச் சிறந்த நாட்டு மருந்து. வேப்பிலையை அரைத்து ( சார் எடுத்தும் தேய்க்கலாம். அப்படியே தேய்த்தாலும் நலம் ) தலை முடியில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

பூண்டு பொடுகிற்கு எதிரி. தேங்காய் எண்ணெயை இளம் சூட்டில் பூண்டு பல் சேர்த்து தலை முடியின் ஸ்கேல்ப் மீது தேய்க்க பொடுகு நாளடைவில் குணமாகும்.

தலைமுடியை எப்போதும் மாசு ஏற்படாவண்ணம் சுத்தமாக வைத்திருத்தல் அவசியம். தலைமுடியின் ஸ்கேல்ப் மீது ஏற்படும் அதிக வறட்சியின் காரணமாக பொடுகு ஏற்படும். உடலுக்கு தேவையான தண்ணீர் அதிகம் பகிர வேண்டும்.

ஈரத் துண்டோடு தலையை அதிக நேரம் வைத்திருத்தல் கூடாது. குளித்த பின்னர் தலை முடியை உலர வைக்க வேண்டும்.

தலை முடிக்கு வெங்காயத்தை பயன்படுத்துவதால் பொடுகு தொல்லை குறையும். வெங்காய சாற்றை முடியின் வேர் மீது படும் படி தேய்க்க வேண்டும்.

வெந்தயத்தை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலை அரைத்து தலைக்கு தேய்த்து ஊற வைத்து குளித்தால் பொடுகு பறந்து போகும். அவ்வாறு செய்வதால், முடி அடர்த்தி பெறுவதோடு கருமை அடையும், பொடுகு தொல்லையும் இருக்காது.

உணவில் கருவேப்பில்லை சேர்த்துக்கொள்ள முடியின் அடர்த்தி அதிகரித்து பொலிவு பெரும்.