முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

today news in tamil

கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. மேலும் கோவை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் சில இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.