“நாம் vibe ஆக ஒரு பாடல் வேண்டுமே தேவி” : முதல் சிங்கள் – வைரலாகும் கார்த்திக் த்ரிஷா டீவீட்ஸ்

பொன்னியின் செல்வன், பல ஆண்டு காலமாக பல இயக்குனர்களும், நடிகர்களும் நடிக்கவும், இயக்கவும் ஆசைப்பட்ட ஒரு திரைப்படம். முதன் முதலில் எம்ஜிஆர் அவர்களால் இந்த ஆசை தீ ஏற்றி வைக்கப்பட்டது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பலருடைய அந்த கனவை நினைவாக்கினார் இயக்குனர் மணிரத்தினம்.
தமிழ் சினிமா வரலாற்றில் இத்தனை முன்னணி நடிகர்கள் ஒருங்கே இணைந்து இதுவரை நடித்ததில்லை என்று கூறும் அளவிற்கு ஜெயம் ரவி, கார்த்திக், சரத்குமார், பார்த்திபன், இளைய திலகம் பிரபு, ஜெயராமன், ஐஸ்வர்யா ராய்., த்ரிஷா உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்து வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் இறுதி பாகம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இன்று மார்ச் 20ம் தேதி இந்த படத்தின் அக நக என்ற முதல் சிங்கள் பாடல் வெளியாகவுள்ளது.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையில் கார்த்திக் மற்றும் திரிஷா இருவருக்கும் இடையே நிகழும் நிகழ்வை இந்த பாடல் குறிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இன்று வெளியாகும் இந்த பாடல் குறித்து வந்தியத்தேவனும் குந்தவை தேவியும் போட்டுவரும் டீவீட்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.