மெகா ஹிட் படமாக மாறிய PS 2 – ரசிகர்களுடன் கண்டுகளித்த அருன்மொழி மற்றும் கரிகாலன்!

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உலக அளவில் வெளியாகி பல சாதனைகளை புரிந்து வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் இந்த படத்தை வியந்து பாராட்டி வருகின்றனர் என்று தான் கூற வேண்டும்.
விமர்சன ரீதியாகவும் நல்ல பல கருத்துக்களை பெற்று வருகிறது பொன்னியின் செல்வன், இயக்குநர் மணிரத்னம், மீண்டும் ஒருமுறை தன்னால் என்ன முடியும் என்பதை நிரூபித்துள்ளார் என்றே கூறலாம். இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் அதிக வசூலை கண்டுள்ள திரைப்படங்களில் ஒன்றாக பொன்னியின் செல்வன் படம் உள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள இரு பிரபல திரையரங்குகளில் அருன்மொழி வர்மனாக நடித்த, நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவருடைய அண்ணனாகவும் ஆதித்த கரிகாலனாகவும் நடித்த நடிகர் விக்ரம் அவர்களும் ரசிகர்களுடன் இணைந்து இந்த திரைப்படத்தை பார்த்துள்ளனர்.
கார்த்திக் மற்றும் திரிஷா அதாவது வல்லவரையன் வந்தியத்தேவன் மற்றும் குந்தவை ஆகிய இருவருக்கும் இடையே உள்ள காதல் காட்சிகளும் வெகு நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்களுக்கு கூறி வருகின்றனர்.