சரித்திரப் புகழ் வாய்ந்த அந்த நகரத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரி, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் அருகில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

ponniyin selvan update

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் அருகில் சதுர்புஜ் கோவில், சாத்ரிஸ், ஜஹாங்கிர் மகால், லட்சுமி நாராயண் கோவில், ராஜ மஹால், ராம் ராஜா கோவில் என பல இடங்கள் உள்ளன. அதில் சில முக்கியமான இடங்களில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படப்பிடிப்பிற்காக மணிரத்னம், பிரகாஷ்ராஜ், கார்த்தி உள்ளிட்டோர் அங்கு சென்றுள்ளனர். பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மணிரத்னம், கார்த்தி ஆகியோருடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Advertisement