in

சினிமா முயற்சியில் ஈடுபடும் பெண்கள்..! நடிகை பூர்ணாவின் எச்சரிக்கை பேட்டி..!

கொடி வீரன், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்து வருபவர் நடிகை பூர்ணா.

திருமணம் செய்துக்கொள்வதாக ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற நபர்களை போலீசாரிடம் சிக்க வைத்துள்ளார் இந்த சிங்கப்பெண் பூர்ணா.

இதுகுறித்து பேட்டி அளித்துள்ள இவர், என்னைபோல் வேறு யாரும் பாதிக்க கூடாது என்றுதான் புகார் அளித்தேன். பலர் இவர்களால் பாதிக்கப்பட்டது இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும், பெண்கள் அறை எடுத்து தங்கி சினிமா வாய்ப்புகளை தேடி வருகின்றனர். யார் வாய்ப்பு வாங்கி தருவதாக அணுகினாலும் அவர்களை பற்றி தோழிகள் மூலம் நன்றாக விசாரித்து தெரிந்து கொண்டு முடிவு எடுங்கள் என்று பூர்ணா கூறினார்.