Search
Search

சிட்டுக்குருவிக்காக இருளில் வாழும் மக்கள் – எந்த ஊர் தெரியுமா?

மின் கதிர்கள், செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வரும் நிலையில் சிட்டுக்குருவிக்காக ஒரு கிராமமே மனித நேயத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்.

சிட்டு குருவிகள் கூடு கட்டினால் ஊருக்கு நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மின் இணைப்பு பெட்டியில் உள்ள சிட்டுக்குருவியின் கூட்டை களைக்காமல் இருளில் வந்து வருகிறது ஒரு கிராமம்.

சிவகங்கை மாவட்டம், பொத்தகுடி கிராமத்தில் ஒரு மின் இணைப்பு பெட்டியில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டி முட்டையிட்டு அடைகாத்து வந்துள்ளது. இதை பார்த்த அந்த கிராமத்து வாலிபர்கள் அதனை பாதுகாக்க தொடங்கியுள்ளனர்.

தெருவிளக்குகள் எரிய மொத்த கன்ட்ரோல் ஸ்விட்ச்சும், குருவி கூடு கட்டிய மின் இணைப்பு பெட்டியில் இருப்பதால், சுவிட்சை ஆன் செய்யக்கூட முடியவில்லை என்பதால் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக மக்கள் இருளில் வாழ்ந்து வருகின்றனர்.

குருவிகள் கூடு கட்டினால் நல்ல சகுனம் என்றும், ஊருக்கும் மக்களுக்கும் அதிர்ஷ்டம் பிறக்கும் என்று அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

You May Also Like