போத்தனூர் தபால் நிலையம் திரை விமர்சனம்
1990களில் படத்தின் கதை நகர்கிறது. கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூரில் உள்ள தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக இருக்கிறார் வெங்கட் ராமன். இவருடைய மகன் பிரவீன் சொந்தமாக பிசினஸ் ஆரம்பிப்பதற்காக வங்கி லோனுக்காக காத்திருக்கிறார்.
ஒரு நாள் தபால் நிலையத்தில் டெபாசிட் ஆக வந்த பணத்தை, வங்கியில் செலுத்தாமல் விட்டுவிடுகிறார் கேஷியர். அடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் போஸ்ட் மாஸ்டர் அந்த பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்கிறார். செல்லும் வழியில் அந்தப் பணம் திருடு போகிறது.

இந்த சூழ்நிலையில் போஸ்ட் மாஸ்டர் மகன் பிரவீன், காணாமல் போன பணத்தை கண்டுபிடித்தார்களா? கொள்ளையடித்தவர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
இந்தப் படத்தை எழுதி, இயக்கி, நடித்துள்ளார் பிரவீன். 1990 கால கட்டத்தில் திரைக்கதை நகர்வதால் அதற்கு ஏற்றார் போல் சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தி இருக்கிறார்கள்.
பிரவீனின் அப்பாவாக நடித்திருக்கும் ஜெகன் கிரிஷ் நடிப்பில் மிரட்டுகிறார். மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை போக போக விறுவிறுப்பாக நகர்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி ராவ், அமைதியாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர் 90களின் காலகட்டத்தை அழகாக நம் கண்முன்னே நிறுத்தியுள்ளார். பின்னணி இசை, எடிட்டிங் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
படத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னுமே ரசிக்க வைத்திருக்கும்.
