Search
Search

“இது ஹை வோல்ட்டேஜ் ஆக்ஷன் படம்” – தெலுங்கு இயக்குநருடன் கைகோர்க்கும் தளபதி!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பரபரப்பாக உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டைட்டில் வெளியான நாள் முதல் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது மிக மிக அதிகமாக உள்ளது.

காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக லியோ திரைப்படம் LCU-விற்குள் உள்ளதா? இல்லையா? என்பது தான் ரசிகர்களிடையே உள்ள மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் லியோ படமே இன்னும் முழுமையாக எடுத்து முடிக்கப்படாத நிலையில் விஜய் தனது அடுத்த படத்திற்கான கதையை கேட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றது. தெலுங்கில் பிரபல நடிகரான பாலையாவை வைத்து வீர சிம்மா ரெட்டி என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த கோபிசந் தான் தளபதி விஜய்க்கு ஒரு கதையை கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

இது முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என்றும், மேலும் இந்த கதையைக் கேட்ட உடனே தளபதி விஜய் அவர்கள் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

You May Also Like