இது தான் இப்போ ட்ரெண்டிங் : காஷ்மீர் பைல்ஸ் ஒரு Nonsense படம் – பொது மேடையில் மைக் போட்டு பேசிய பிரகாஷ்ராஜ்
பிரகாஷ் ராஜ், இந்திய சினிமாவில் பெரும் திறமைகொண்ட ஒரு இயக்குநர் மற்றும் நடிகர் என்பதை பலரும் அறிவார்கள். அவர் சமீபத்தில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு வெளியான காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து சர்ச்சையான விஷயங்களை பேசியுள்ளார்.
காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு விவேக் அக்னிஹோத்ரி என்ற இயக்குநரால் இயக்கப்பட்டு வெளியானது. இந்த திரைப்படம் 1990-களில் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.
வெளியான நாள் முதல் ஏதோ ஒரு வகையில் இந்த திரைப்படம் தொடர் சர்ச்சைகளை எதிர்நோக்கி வருகின்றது என்று தான் கூறவேண்டும். மதங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வாய்ப்பு உள்ளதால் தங்கள் நாட்டு சட்டப்படி இந்த படத்தை வெளியிட தடை செய்வதாக சிங்கப்பூர் அரசு அப்போது அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த படத்தின் இயக்குனர் விவேக், தங்கள் படத்திற்கு ஆஸ்கார் விருது கூட அளிக்கலாம் என்று கூறிய நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த படத்திற்கு ஆஸ்கார் விருதா? உங்களுக்கு பாஸ்கர் கூட கிடைக்காது என்று கூறி, காஷ்மீர் பபைல்ஸ் ஒரு நான்சென்ஸ் படம் என்றும் கூறியுள்ளார்.
