பிரணாப் முகர்ஜி வாழ்க்கை வரலாறு

மேற்கு வங்க மாநிலத்தில் மிரதி என்ற கிராமத்தில் 1935 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிரணாப் முகர்ஜி பிறந்தார். இவருடைய தந்தை சுதந்திர போராட்ட தியாகி. மேலும் 1952 மற்றும் 1964 இல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்காள தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரணாப் முகர்ஜிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். பிரணாப்பின் மூத்த மகன் அபிஜித் முகர்ஜி மேற்கு வங்காளத்தின் ஹன்ஞ்பூர் தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார்.

சுரி வித்யாசாகர் கல்லூரியில் பி.ஏ. படிப்பை முடித்தார். பிறகு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. மற்றும் சட்டக்கல்வியில் பட்டம் பெற்றார்.

1963 ஆண்டில் வித்யாசாகர் கல்லூரியில் துணை பேராசிரியராகவும் சில காலம் பத்திரிக்கையாளராகவும் செயல்பட்டு வந்தார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1969 ஆம் ஆண்டு பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் கட்சியோடு இணைத்துக்கொண்டார். பிறகு அதே ஆண்டில் மாநிலங்களவையில் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

1975,1981,1993 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1973-ம் ஆண்டு மத்திய தொழில்த்துறை அமைச்சகத்தில் பிரணாப் முகர்ஜிக்கு துணை மந்திரி பதவி வழங்கப்பட்டது.

1991 ல் ராஜீவ் காந்தி மறைவுக்கு பிறகு வி.பி.நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. அப்போது மத்திய திட்டக்குழுவின் துணைத்தலைவராகவும், மத்திய கேபினெட் மந்திரியாகவும் பிரணாப் முகர்ஜி செயல்பட்டார்.

1998 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்டது.

1984 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் பிரதமர் பதவிக்கு அவருடைய பெயர் பரிசீலிக்கப்பட்டது.

2012 முதல் 2017 வரை இந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவி வகித்தார்.

பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்ட முக்கிய விருதுகள்:

1984 – உலகின் சிறந்த நிதிமந்திரி (யூரோப் மனி பத்திரிக்கை)
2010 – ஆசியாவின் சிறந்த நிதிமந்திரி (எமர்ஜிங் மார்க்கெட் பத்திரிக்கை)
2008 – பாரத ரத்தனா
2010 – வருடத்தின் சிறந்த நிதிமந்திரி ( த பேங்கர்)
2019 – பத்ம விபூஷன்

மறைவு

டெல்லியில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்தார். தலைசுற்றல் மற்றும் இடது கை உணர்ச்சியற்ற நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மூளையில் ரத்தக்கட்டி இருப்பதையும், கொரோனா தொற்று இருப்பதையும் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். சிகிச்சை மூலம் ரத்தக்கட்டி நீக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக அவரது உடல் நிலை மோசமானது.

சுவாசக்கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரணாப் முகர்ஜி 31-08-2020ல் மாலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

Recent Post