மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தயார் நிலையில் இருக்கும் அரசு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார்.

tamil news
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தயார் நிலையில் இருக்கும்

கான்பூரில் இன்று பிற்பகல் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பணிகள் முடிக்கப்பட்டு தயாராக இருக்கும் கான்பூர் மெட்ரோ ரயில், பினா-பாங்கி இடையிலான பல் நோக்கு எரிவாயு குழாய் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார்.

மேலும் கான்பூர் ஐ.ஐ.டி.54 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement