தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.

அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழ்நாடு அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூன் மாதம் ஆளுநர் உரையில் “தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கும், அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்” என்று அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு மையங்கள் மற்றும் நாளிதழ் விளம்பரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில் இந்த இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு வழங்கும் முறை நடைமுறைக்கு வருகிறது.

Advertisement

கணவனை இழந்தவர்கள், சாதி மறுப்பு திருமண தம்பதியர் ஆகியோருக்கும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு வழங்கும் முறை அமலாகிறது. கல்லூரிகளில் முழுவதுமாக தமிழ் வழியில் கல்வி பயின்றிருந்தால் மட்டுமே அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.