Search
Search

மாட்டுக்கு மட்டும் 1.5 கோடி செலவு.. வாடிவாசல் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக படப்பிடிப்பு பணியில் இருந்து வரும் ஒரு திரைப்படம் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ்ராஜ் அவர்களுடைய இசையில் பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வாடிவாசல்.

பிரபல எழுத்தாளர் செல்லப்பா அவர்களின் வாடிவாசல் என்ற நாவலை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ் தாணு அவர்களுடைய தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த படம் குறித்த எந்த தகவலும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் இருந்து வந்தனர். தற்போது சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு அவர்கள் ஒரு பேட்டியில் பேசிய பொழுது.

ஒவ்வொரு முறை இந்த படத்திற்கான ஒரு சிறிய அறிவிப்பு வரும்பொழுதும், அதை ரசிகர்களின் மிகப்பெரிய அளவில் கொண்டாடுவது மன மகிழ்ச்சி அளிப்பதாகவும், தற்பொழுது லண்டனில் CG பணிகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

வாடிவாசல் படத்திற்கான அனைத்து வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், குறிப்பாக காளையை பயிற்றுவிப்பதற்கு மட்டும் சுமார் ஒன்றரை கோடி செலவாகி உள்ளதாகவும் அவர் கூறினார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like